கிரிவலம் முடிந்த கையோடு பக்தர்கள் செய்த காரியம் - திருவண்ணாமலையில் பரபரப்பு

x

கிரிவலம் முடித்துக் கொண்டு பக்தர்கள் தங்கள் ஊருக்கு செல்ல போதிய பேருந்து இயக்காததால் மறியலில் ஈடுபட்ட பக்தர்கள், அரசு பேருந்தையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் குருதண்டபாணியிடம் கேட்கலாம். வல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் கடும் வாக்குவாதம்-அரசு பேருந்து சிறப்பிடித்த பக்தர்கள்.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு லட்சக்கணங்கள் பக்தர்கள் வருவது வழக்கம் அதன்படி நேற்று வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு உள்ளூர் வெளியூர், வெளிமாவட்டம்,வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து இரவு முழுவதும் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவலம்சென்றனர். மாவட்ட நிர்வாக சார்பில் 9 தற்காலிக பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளனது. இந்நிலையில் இன்று காலையில் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாதால் கிரிவலம் முடித்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரிடம் பக்தர்களுக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மேலும் பக்தர்கள் தெரிவிக்கையில் நாங்கள் சென்னையில் இருந்து நேற்று திருவண்ணாமலை. வந்தோம். பின்னர்இரவு முழுவதும் கிரிவலம் முடித்துக் கொண்டு இந்த காலையில் சென்னை திரும்ப தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்தோம் காலை 6.30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரை சுமார் 3 மணி நேரமாக சிறப்பு அரசு பேருந்து இயக்கப்படவில்லை இன்று பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அரசு பேருந்து பக்தர்கள் சிறைப்பிடித்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்த சிறப்புப் பேருந்தை சென்னைக்கு மாற்றி பக்தர்கள் செல்லும் வகையில் பேருந்தை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்