"முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா" காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம்
"முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா" காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம்
கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வைரக்கற்கள் பதித்த தங்க கவசத்துடன் முருகப்பெருமான் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் காவடி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கோயிலின் பின்புறம் உள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டியும், தீபமேற்றியும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2008 காவடிகள் ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்து ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானையும், அண்ணா மலையாரையும் தரிசனம் செய்தனர்.
Next Story
