திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

x

வார விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியிலும், நாழிக்கிணறு பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்