சபரிமலையில் குவியும் பக்தர்கள்..அதிர வைத்த டிரம்ஸ் சிவமணி | Drums Sivamani | Sabarimala

பவித்திரம் சபரிமலை திட்டத்தில் பங்குகொண்ட டிரம்ஸ் சிவமணி, டிரம்ஸ் இசைத்தபடி பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கேரளா மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அங்கு விட்டுச் செல்வதால், சுற்றுச் சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் சுற்றுச் சூழலை தூய்மையாக பராமரிக்கும் விதமாக பவித்திரம் சபரிமலை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிரம்ஸ் சிவமணி இதில் பங்குகொண்டு பக்தர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com