சபரிமலையில் கோஷத்துடன் குவியும் பக்தர்கள் - தேவஸ்தானம் கொடுத்த குட் நியூஸ்

x

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பால், தரிசன நேரம் நீட்டிக்கப்படவுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17-ஆம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து, தரிசனம் செய்ய ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு திறக்கப்படும் நடை, ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு திறக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்