ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களுடன் துணை சபாநாயகர் சிறப்பு தொழுகை!

x

இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

புனித ரமலான் திருநாளையொட்டி, சென்னை மண்ணடியில் உள்ள பள்ளியில் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் நோன்பு பெருநாள் உரை நடைபெற்றது. சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரமலான் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். எம்.எல்.ஏ ஜவஹிருல்லா நோன்பு பெருநாள் உரை ஆற்றினார்.

திருவண்ணாமலை ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய சகோதரர்களை ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ஜாமியா பள்ளிவாசலில் உலக மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், கொரொனா பெருந்தொற்று நாட்டை விட்டு விலகி செல்லவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் தர்மபுரியின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்