MP பதவி பறிப்பு... எப்படி சிக்கினார் ஓபிஆர்..! ஒற்றை வாக்காளர் செய்த புரட்சி - தப்பிப்பாரா ஓபிஎஸ் மகன் ..?

x

தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கின் சாராம்சத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் ரவீந்திரநாத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்து விபரங்களையும், வருவாய் விபரங்களையும் மறைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், பல்வேறு முறைகேடுகளை செய்தும் ரவீந்திரநாத் வெற்றிப்பெற்றார் எனவும் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மில்லர் கேட்டிருந்தார்.

இந்த வழக்கை நிராகரித்து, தள்ளுபடி செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை 2020-ல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மிலானி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு முகாந்திரம் உள்ளது; வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றது உயர்நீதிமன்றம்.

தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வந்த உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத்தை ஆஜராகுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான ரவீந்தரநாத், குற்றச்சாட்டுகளை மறுத்தார். தேர்தல் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தீர்ப்பை வழங்கினார்.

ரவீந்திரநாத் வேட்பு மனுவில் சொத்து, கடன், வருமானம் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும் முறையற்ற வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என நீதிபதி கூறினார். தொடர்ந்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாதுஎனவும் உத்தரவிட்டார்.

அப்போது ரவீந்திரநாத் தரப்பில், மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்