டி.கே.சிவகுமாருக்கு ஒதுக்கிய துறை - தமிழ்நாட்டுக்கு தலைவலியா..?

கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட 34 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதி துறை, நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம், உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சரான டி.கே.சிவகுமாருக்கு நீர்பாசனம் மற்றும் பெங்களூரு நகர மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே(Priyank Kharge), ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பட்டியல் சமூக தலைவராக கருதப்படும் பரமேஸ்வராவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்துறை ஜார்ஜ்-க்கும், சட்டத்துறை பாட்டீலுக்கும், பொதுப்பணித்துறை சதீஷ் ஜார்கிக்கும் வழங்கபட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com