அடர்ந்த மூடுபனி எதிரொலி, 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்... ரயில் சேவையும் பாதிப்பு

x

அடர்ந்த மூடுபனி எதிரொலி, 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்... பனிமூட்டத்தால் ரயில் சேவையும் பாதிப்பு

டெல்லியில் கடுமையான மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விமான நிலையத்தில் நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாக 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் நிலவியது. மேலும், விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த 18 விமானங்களும் வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு 39 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கடந்த ஐந்து நாள் கடும் குளிருக்குப் பிறகு டெல்லியில் குளிர் தாக்கம் சற்று குறைந்துள்ளது. சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக, 277 ரயில்களை இந்திய ரயில்வே இன்று முழுமையாக ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்