டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமன் கோயில், தர்கா இடிப்பு

டெல்லியில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கையாக, கோயில் மற்றும் தர்கா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டுள்ளது. டெல்லி பஜன்புரா பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றவும், சஹாரன்பூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கையிலும் பொதுப்பணித்துறையினர் இன்று காலை ஈடுபட்டனர். இதன்படி, மதக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில், அனுமன் கோயில் மற்றும் தர்கா ஆகியவை, போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். படையினரின் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com