குட்டிகளை சுமந்த நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்... குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக தகவல்

குட்டிகளை சுமந்த நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்... குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக தகவல்
Published on

தென்மேற்கு டெல்லியில் கர்ப்பமாக நாயை அடித்து கொன்ற மாணவர் கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாயை சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதோடு, அதன் உடலை புல் தரையில் தரதரவென இழுத்த சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை கவனித்த போலீசார், டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து குரைத்து தொந்தரவு செய்ததால் நாயை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com