"போய் ரயில் பெட்டிய எண்ணுங்க" அப்பாவி தமிழக இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம் - நம்ப வைத்து கழுத்தறுத்த வடமாநில நபர்

டெல்லி ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, தமிழக இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரெயில்வே நிலையத்தில் முகாமிட்டிருந்த சில இளைஞர்கள் பிளாட்பாரங்களில் ரெயில்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்துள்ளனர். இதனை கவனித்த ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர்களில் சிலரை அழைத்து கேட்டிருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர்கள் தங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும், இதற்காக தங்களை ரயில்களை கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்த போது இது ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. இதுக்குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விகாஸ் ராணா என்பவர், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 2 கோடியே 50 லட்ச ரூபாயை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விகாஸ் ராணாவை தேடி வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com