35 துண்டுகளாக வெட்டி புதிர் போட்ட காதலன் - உண்மை கண்டறிய போலீசார் எடுத்த அதிரடி

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் குற்றவாளி அஃப்தாப் பூனாவாலாவிற்கு பாலிகிராஃப் எனும் பொய் கண்டறியும் சோதனை முதல் கட்டமாக நடைபெற்றது.
x

கடந்த மே மாதம் 18 ம் தேதி தனது காதலியை கொன்ற ஆப்தாப், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் உள்ள வனப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அஃப்தாப்பிற்கு, டெல்லி ரோகினியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பாலிகிராஃப் சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையினரின் கேள்விக்கு முரண்பாடான பதில்களை அளித்ததால் , குற்றவாளி சொல்லும் பதில் சரியா தவறா என்று கண்டறிய பாலிகிராஃப் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் பிறகு உண்மை கண்டறியும் நார்கோ சோதனை நடத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்