பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான சம்பவம் -சதித்திட்டம் தீட்டி பொய் புகார் அளித்தது அம்பலம்

x

டெல்லியில், பாலியல் பலாத்காரம் செய்து பெண் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக வெளியான பரபரப்பு சம்பவம், வெறும் நாடகம்தான் என போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

காசியாபாத் ஆசிரமம் சாலையில், பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், 2 நாள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பெண்ணின் மர்ம உறுப்பில் இரும்பு ராடால் சொருகப்பட்டதாகவும், 5 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

இந்த சம்பவத்தில் டெல்லி மகளிர் ஆணையம் தலையிட்டதை அடுத்து, விவகாரம் சூடுபிடித்தது.

ஆனால், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலத்தகராறில் எதிர் தரப்பினரை பழிவாங்க, அந்தப் பெண் நடத்திய நாடகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பெண்ணிற்கு பரிசோதனை செய்ததில், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நேரத்தில், அந்தப் பெண் தனது நண்பர்கள் வீட்டில் இருந்ததை, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் உறுதி செய்துள்ளனர்.

மொத்தத்தில், நிலத் தகராறில் 5 பேரை சிக்க வைக்க, சதித்திட்டம் தீட்டப்பட்டது நிரூபணமாகியுள்ளதால், பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்