மகனுடன் சேர்ந்து கணவனை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் பாதுகாத்த மனைவி.. துண்டுகளை கூலாக வீசிய காட்சி

x

தகாத உறவில் இருந்த கணவனை கொன்ற மனைவி மற்றும் மகன் ; டெல்லியில் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம்

டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் தனது கணவரை கொலை செய்ததாக பெண் தனது மகனுடன் டெல்லி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை கொன்று உடலை பல துண்டுகளாக வெட்டி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அருகில் உள்ள நிலப் பகுதிகளில் அப்புறப்படுத்தி உள்ளனர். இது அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது

காவல்துறையினரின் தகவலின் படி , பூனம் மற்றும் அவரது மகன் தீபக் ஆகியோர் முதலில் , கணவர் அஞ்சன் தாஸை தூக்க மாத்திரைகள் கொடுத்து கொன்று, அவரது உடலை சிறிய துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தனர்

பின்னர் பாண்டவ் நகர் மற்றும் கிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தினமும் சில பாகங்களை வீசி உடலை அப்புறப்படுத்தத் தொடங்கினர். கொலைக்கு காரணம் கணவரின் தகாத உறவு என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

ஒரு மாதத்திற்கு முன்பு, இதேபோன்ற ஒரு கொலை ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது, அஃப்தாப் பூனாவாலா தனது காதலி ஷ்ரதா வால்கரை கொன்று , உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசினார்

இந்நிலையில் கணவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் தாய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி பாண்டவ் நகரில் உள்ள ராம்லீலா மைதானம் அருகே கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண் மற்றும் அவரது மகனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இருவரும் உடலை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தனர், ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் பின்பற்றிய மாதிரி.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கணவனை கொன்ற மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்துள்ளனர் மேலும் கொலை காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்