"போதையில் காருக்கு அடியில் சிக்கினாள்"....இளம்பெண் மரணத்தில் ஷாக் ட்விஸ்ட் - உண்மையை கக்கிய தோழி.. சிக்கியது சிசிடிவி..!

x

டெல்லில் காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் விபத்துக்கு முன்னதாக, தனது தோழியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலி என்ற பெண், காரில் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு கோரமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், விபத்துக்கு முன்பு ஹோட்டல் முன்பு நின்றிருந்த அஞ்சலி, தனது தோழியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி , இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது மது போதையில் இருந்ததாக, அவரது சக தோழி நிதி, புதிய தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான நிலையில் அஞ்சலியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், உயிரிழந்த அஞ்சலியின் தோழி நிதி, செய்தியாளர்களிடம் பேசிய போது, விபத்து நிகழ்ந்த போது தாமும் உடன் பயணித்ததாகவும், அஞ்சலி மது போதையில் இருந்ததாக கூறியுள்ளார். காரில் அடிப்பட்ட நேரத்தில் தாம் கீழே விழுந்ததாகவும், பின்னர் அங்கிருந்து ஓடி தமது வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளம்பெண்ணின் தோழி நிதி, கூறிய புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்