#JUSTIN || ராகுல்காந்திக்கு டெல்லி ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

புதிய பாஸ்போட் பெற ராகுல் காந்திக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் தண்டை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி இழந்தார். இதையடுத்து அவருக்கு இருந்த டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டதால், வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க கோரி ராகுல் காந்தி ரௌஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பெருநகர கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் வைபவ் மேத்தா விசாரித்தார். இதற்கு, சுப்ரமணியன் சுவாமி ஆட்சேபம் தெரிவித்ததுடன், ராகுல் காந்தி வெளிநாடு செல்ல அனுமதித்தால், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையை பாதிக்கும் என்றார்.

ராகுல் காந்திக்கு எதிராக எவ்வித கிரிமினல் வழக்குகளும் இல்லையென்பதால், புதிய பாஸ்போர்ட்டை பெறுவதற்கு தடையில்லா சான்றை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.

ராகுல் காந்தி தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்