'தடுக்கி நீ விழு... திரும்ப நீ எழு..'தோல்வி தந்த வெறி... துணையை நின்ற மனைவி UPSC-ல் வென்ற ஏட்டய்யா

x

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 933 தேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், டெல்லி சைபர் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராம் பஜன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். ஏழு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதிய நிலையில், எட்டாவது முறையாக இந்திய அளவில் 667ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தொடர் தோல்வியை சந்தித்த போதும், தனது மனைவி ஊக்கப்படுத்தியதாகவும், வலிமையின் தூணாக தனது மனைவி திகழ்வதாகவும் ராம் பஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற காவலர் ராம் பஜனுக்கு சக காவலர்கள், உறவினர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்