டெல்லி துணை முதல்வர் பரபரப்பு புகார் | delhi | thanthi tv

x

டெல்லியில் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மியில் சீட் விற்கப்படுவதாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அக்கட்சியின் எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியின் உறவினர், உதவியாளர் என மூவரை கைது செய்தனர். இவர்கள் கட்சி தொண்டரிடம் சீட் தருவதாக கூறி 90 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, யாரோ கொடுத்த பணத்தை யாரோ வாங்கியிருக்கிறார்கள் எனவும் ஆம் ஆத்மியில் தேர்தல் சீட் விற்கப்படவில்லை எனவும் இதில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தலைமையிலான 4 பேர் கொண்ட ஆம் ஆத்மி குழு இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில் குஜராத் மாநிலம், சூரத் கிழக்கு வேட்பாளரின் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்காக வற்புறுத்தப்பட்டதாகக் புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க குஜராத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்