நிர்பயா வன்கொடுமையின் பத்தாவது ஆண்டு நினைவு நாளான்று, நாடாளுமன்ற அவைக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி மகளிர் ஆணையம்

x

நிர்பயா வன்கொடுமையின் பத்தாவது ஆண்டு நினைவு நாளான இன்று, நாடாளுமன்ற அவைகளுக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தேசிய தலைநகரான டெல்லியில் தினமும் 6 பாலியல் வன்கொடுமை அரங்கேறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டதுடன், 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி ஆசிட் விற்கப்படுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையர் சுவாதி வாலிபால் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்