"ரூபாய் நோட்டுகளில் கடவுள் படம் வேண்டும்" - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

x

ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிடவேண்டும் எனப் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல முன்னெடுப்புகளை செய்யவேண்டும் என்றாலும்,ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து பல தரப்பினரும் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்கள், கடவுள் படங்களை ரூபாய் நோட்டில் அச்சிடுமாறு கருத்து வெளியிட்டனர். இந்த விவகாரத்தை விடாத அரவிந்த் கெஜ்ரிவால், இன்று காலையில் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படம் இருக்கடும்; மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்கள் அச்சிடப்பட வேண்டும்; இது நாட்டு மக்கள் 130 கோடி பேரின் விருப்பம் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். சரியான கொள்கை, கடினமான உழைப்பு ஆகியவற்றோடு, கடவுளின் ஆசியும் இருந்தால்தான் நாடு முன்னேறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்