தீபாவளியால் மோசமான காற்றின் தரம் - "கடந்த 5 ஆண்டுகளை விட.." - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

x

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது டெல்லியில் காற்றின் தரம் குறைவாக பதிவாகியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையால் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. இது குறித்து டிவிட்டர் பதிவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், காற்றின் தரம் 2018ம் ஆண்டு 390 ஆகவும், 2019ம் ஆண்டு 367 ஆகவும், 2020ம் ஆண்டு 435 ஆகவும், 2021ம் ஆண்டு 462 ஆகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு காற்றின் தரம் சற்று குறைந்து 326 ஆக பதிவாகியுள்ளது என்றார். காற்றின் மாசை குறைக்க மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்