தமிழகம் வருகிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் | Rajnath Singh

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், வரும் 20ம் தேதி தமிழகம் வருகிறார். ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத்சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்படுகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com