உள்ளாட்சி தேர்தலில்ஏற்பட்ட தோல்வி... பூர்வீக சொத்தை ஏமாற்றிய உறவினர்கள் - 42 வயது நபர் எடுத்த விபரீத முடிவு

x

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கெஜராஜ் என்பவருக்கு, 42 வயதான நிலையில் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்ததால், கெஜராஜ் கடனில் தத்தளித்துள்ளார். மேலும், சித்தப்பாவான நடராஜ ரெட்டியார் மற்றும் அவரது மகன் ரவி ஆகியோர் சேர்ந்து, கெஜராஜ்க்கு சொந்தமாக பைக் ஷோரூமை வைத்துக் கொடுத்துள்ளார். அதிலும் நஷ்மடைந்ததால், பூர்வீக சொத்தை கேட்டு, சித்தப்பாவிடம் கெஜராஜ் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து கெஜராஜ் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், பூர்வீக சொத்தை தனது உறவினர்கள் ஏமாற்றி விட்டதால், அவர்களே தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்