ஆளுநரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.. திமுக பேச்சாளர் மீது டிஜிபியிடம் பாய்ந்த மனு..

x

திமுக பொதுக்கூட்டத்தில் ஆளுநர் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணன் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளித்த, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போருது அவர், பொது மேடைகளில் அவதூறு பரப்பும் வகையில் அருவருக்கத்தக்க வகையிலும் திமுக பேச்சாளர்கள் பேசுவதை பொதுமக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்