வசூலை அள்ளி குவித்த தீபாவளி சிறப்பு ரயில்கள் - ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!

x

தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு, 2 கோடியே 96 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியது. இதுகுறித்து, தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தெற்கு ரயில்வே சார்பில் அளிக்கப்பட விளக்கத்தில், தீபாவளியை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 2 கோடியே 96 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்