தீபாவளி - இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

x

தீபாவளி - இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த மூன்று நாட்கள் மொத்தம் 10 ஆயிரத்து 518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 218 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.

11 முன்பதிவு மையங்கள், சிறப்பு பேருந்து நிலையங்களிலும் 20 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்