CSK ரசிகர்களுக்கு ஷாக் தகவல் சொன்ன தீபக் சஹார்

காயத்திலிருந்து மீண்டுள்ள சென்னை அணி வீரர் தீபக் சஹார், தான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என கூறியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின் பேசிய அவர், ஒவ்வொரு முறை காயம் அடையும் போதும் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமெனவும், அது கடினமான காரியம் எனவும் தெரிவித்தார். இன்னும் 100 சதவீத உடல் தகுதியை எட்டவில்லை என குறிப்பிட்ட அவர், தன்னால் இயன்றவரை அணிக்கு பங்களிப்பு செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com