ஹனுமான் கோயிலை அகற்ற முடிவு..போராட்டத்தில் இறங்கிய பெண்கள் | Delhi

டெல்லியில், கோயிலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மண்டாவளி பகுதியில் அமைந்துள்ள ஹனுமான் கோயிலில், ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு பகுதியில் உள்ள கிரில் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட ஏராளமானோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பதற்றம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com