கடலூர் பக்கம் கவனம் திருப்பும் டிசம்பர்..? 2 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

x

கடலூர் பக்கம் கவனம் திருப்பும் டிசம்பர்..? 2 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கனமழை காரணமாக, சென்னை போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. போரூர் மேம்பாலத்திலிருந்து கிண்டி செல்லும் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால், ஓட்டுநர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே, போக்குவரத்தை சீர் செய்ய மாற்று பாதை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன நுரைகள் பொங்கிச் செல்வதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 99 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, ஆறு மதகுகள் வழியாக 820 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நிலையில், குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கிச் செல்கிறது. துர்நாற்றம் வீசி வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் ரசாயன நுரைகள் செல்வதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தாறு அணையில் இருந்து உபரி வெளியேற்றப்படுவதால் 2 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வராயன்மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தாறு அணைக்கு ஒரே நாளில் 10 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது . அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 11ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 2 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்