டிச. 4 டெல்லி செல்கிறார் முதலமைச்சர் - பிரதமருடன் தனியாக சந்திப்பு? - எதற்கு தெரியுமா? | cm stalin

x

டெல்லியில் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-இல் நடக்க உள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்