பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகள்... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

x

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கடந்த பட்ஜெட்டில், "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, சென்னையில் நவீன இயந்திரங்கள், கருவிகளை பயன்படுத்தி, தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை அடுத்த 4 மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்