டாக்டருக்கு கொலை மிரட்டல் - கேரளாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

x

கேரளாவில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை, இளைஞர் கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே இளைஞர் டொய்ல் என்பவர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதில், இளைஞரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைகாக களமசேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞர், சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் இர்ஃபான் கானை கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், செவிலியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், இளைஞர் டொய்லை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்