உயிர் பலி வாங்கிய மழைநீர் கால்வாய் - நடந்து சென்ற நபர் மீது மோதிய பேருந்து

x
  • சென்னை திருவொற்றியூரில், தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.
  • மற்றொரு நபர் பெண் படுக்காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • காலடிப்பேட்டை அருகே மழைநீர் சேகரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் சாலை ஓரமாக பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது இருவர் மீது தனியார் பேருந்து மோதியது.
  • இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதனை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
  • உடனடியாக அருகில் இருந்த நபர்கள், காயமடைந்த பெண்ணை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர்,
  • இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • அதன் பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்