திடீரென கூட்டம் கூட்டமாக இறந்த வாத்து, கோழிகள் - கேரளாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

x

கேரளாவில் பறவை காய்ச்சல் இருப்பதால் இறைச்சி விற்பனைக்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோட்டயம் சுற்றுவட்டார பகுதிகளான அற்புதரை, வெச்சூர், நீண்டூர் பகுதிகளில் வாத்துகள் மற்றும் கோழிகள் கூட்டம், கூட்டமாக இறந்தன. அதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட பரிசோதிக்கப்பட்டது. அதில், இறந்த வாத்து மற்றும் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாத்து மற்றும் கோழிகளை கொன்று அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி 7 ஆயிரத்டுஹ் 400 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், கோழி, வாத்து, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரம் கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்