"மயானத்தில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும்" "வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் எனவும், வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மயானம் என அறிவிக்கப்படாத பட்டா நிலத்தில் நரசிம்மலு என்பவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நரசிம்மலுவின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஜெயச்சந்திரன் மற்றும் முகமது சபீக் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. எனவே, விதிகளுக்கு முரணாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து, மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்