அப்பல்லோவில் தயாளு அம்மாள்.. கண்ணும் கருத்துமாக கவனிக்கும் மகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உணவு ஒவ்வாமையால் உடல் நலக் குறைவால் கீரிம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் நேற்றே நேரில் வந்து சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தயாளு அம்மாளை இன்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மருத்துவமனையிலேயே இருந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com