டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்- அரையிறுதிக்கு முன்னேறியது இத்தாலி

x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்று உள்ளது. ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவும் இத்தாலியும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 2க்கு 1 என்ற கேம் கணக்கில் இத்தாலி வென்றது. இதன்மூலம் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் இத்தாலி கால்பதித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்