வயிற்று வலியால் துடித்த மகள்.. ஹாஸ்பிட்டல் சென்ற பின் ஷாக்.. சாலையில் அமர்ந்து போராடிய திமுக பிரமுகர்

x

வெண்குன்றத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதியான தியாகராஜனின் மகளுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், அங்கு பணியில் இருந்த மருத்துவர் அலட்சியமாக மருத்துவம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த தியாகராஜன் மருத்துவமனை எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மகளுடன் சாலை மறியல் நடத்தினார். அவ்வழியே அரசுப் பேருந்து ஒன்று வந்த நிலையில், சாலை மறியலால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மறியலைக் கைவிடுமாறும் தாங்கள் வந்து நியாயம் கேட்பதாகவும் மருத்துவமனை உள்ளே சென்ற நடத்துநரும் பயணிகளும் மருத்துவரைக் கண்டித்து அங்கிருந்த சேர்களை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தியாகராஜனுடன் சமாதானம் பேசினர். இதையடுத்து தன் மகளுக்கு சிகிச்சை பார்க்காமல் தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்