கள்ள தொடர்பில் குதூகலமாக இருந்த அப்பா..போட்டு தள்ளிய Dad's Little Princess..பதறவைக்கும் CCTV காட்சி

x

நாக்பூரின் பிவாப்பூர் பகுதியில் சோன்டகே என்பவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மகள் உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை, தனது பெயருக்கு மாற்றித் தரக்கோரி, அடிக்கடி, மனைவி மற்றும் மகளிடம் சோன்டகே தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. சொத்திற்காக அடிக்கடி தனது அம்மாவை கொடுமைப்படுத்தி வருவதைக் கண்ட மகள் பிரியா, தனது தந்தையையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, தந்தையை கொல்ல கூலிப்படையினருக்கு பிரியா 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், நாக்பூர்-நாக்பித் நெடுஞ்சாலையில் உள்ள தனது பெட்ரோல் பங்கில் சோன்டகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 3 பேர், 15 முறை சரமாரியாக கத்தியால் குத்தியதில், சோன்டாகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில் பிரியா தனது தந்தையை கொலை செய்ததற்கான காரணம் போலீசாருக்கு தெரியவந்தது. அதன் பின்னர், பிரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இம்ரான் ஹனிஃப், முகம்மது வாசிம் லால், சுபைர்கான் ஆகிய மூவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தனது தாயை கொடுமைப்படுத்தி வந்த தந்தையை, மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் நாக்பூரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்