மாறுவேடத்தில் மாமியாரை கொன்ற மருமகள்... காட்டி கொடுத்த சிசிடிவி... கைது செய்த போலீஸ்..

x

இறந்து போனவர் இதே வீட்டில் வசித்து வந்த சீதாராமலெட்சுமி. 58 வயதான இவரின் கணவர் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது ஹெல்மெட் அணிந்து வீட்டிற்குள் நுழைந்த ஒரு மர்மநபர், சீதாராமலெட்சுமியை கட்டையால் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடி இருக்கிறார்.அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சீதாராமலெட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்..

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கம்போடு வந்தது திருடன் இல்லை திருடி என்பதும், அது சீதாராமலெட்சுமியின் மருமகள் மகாலெட்சுமி என்ற உண்மையும் வெளி வந்திருக்கிறது. உடனே போலீசார், மகாலட்சுமியை காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் அவரது பலே திட்டம் அத்தனையும் அம்பலமாகி இருக்கிறது. சீத்தாராமலெட்சுமியின் மகன் ராமசாமியின் மனைவி தான் இந்த மகாலட்சுமி. 27 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாலட்சுமி இந்த வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைத்த நாள் முதலே, மாமியாருக்கும், மருமகளுக்கும் ஏழாம் பொருத்தமகவே இருந்திருக்கிறது.தொட்டதுக்கெல்லாம் குற்றம் சொல்லும் சீத்தாராமலெட்சுமியை மருமகளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போயிருக்கிறது. கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகி விடும் என குடும்பதார், மகாலட்சுமியை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் வருடங்கள் ஓடியதே தவிர மாமியார் மருமகளின் சண்டை ஓய்ந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் வீடு இரண்டாக பிரிந்திருக்கிறது.

மகாலட்சுமி தனிகுடித்தனம் சென்ற பிறகும், மாமியார் மருமகள் சண்டை குறையவில்லை. கடந்த10 ஆம் தேதி, வீதியிலேயே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.ஊர்மக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவம் மகாலட்சுமியை துஷ்டலட்சுமி அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது. மாமியாரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார் மகாலட்சுமி. சம்பவம் நடந்த அன்று பக்கா பிளானோடு களம் இறங்கிய மகாலட்சுமி அடையாளம் தெரியாமல் இருக்க ஆண் போல ஃபேன்ட் சட்டை மாட்டி கொண்டு, மாமியார் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.ஆரம்பத்தில் ஹெல்மர்ட் அணியாமல் வீட்டுக்குள் சென்றவர் சட்டென உஷாராகி வெளியே வந்து ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்...

தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை ஈவு இறக்கம் இல்லாமல் கட்டையால் சரமாரியாக தாக்கியிருக்கிறார் மகாலட்சுமி. மாமியார் ரத்த வெள்ளத்தில் சுயநினைவை இழந்ததும், கொள்ளை நடந்ததை போல அந்த இடத்தை சித்தரித்துவிட்டு, 5 சவரண் நகையோடு எஸ்கேப் ஆகியிருக்கிறார் மகாலட்சுமி. கெட்டப் ஜேஞ்சில்" பக்காவாக பிளான் போட்ட மகாலட்சுமி, கடைசியில் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்ததால் சிசிடிவியால் சிக்கியிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சீத்தாராமலெட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மகாலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்