மாமனாரை துடிதுடிக்க கொன்ற மருமகள்.. திருச்சியில் பயங்கரம்

x
  • திருச்சி அருகே சொத்து தகராறில் ஆட்களை ஏவி மாமனாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • முசிறி அருகே சிட்டிலரை மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான முதியவர் மாணிக்கம்.
  • இவருக்கு இரண்டு மனைவியும், 6 பிள்ளைகளும் இருந்த நிலையில், இவரது மகன் கணேசன் திடீரென உயிரிழந்துள்ளார்.
  • இந்நிலையில், அவரது மனைவி மருதாம்பளுக்கும், மாணிக்கத்திற்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • இதில், சம்பவத்தன்று மாணிக்கத்திடம், கும்பலுடன் வந்து மருதாம்பாள் தகராறு செய்த நிலையில், முதியவரை அரிவாளால் வெட்டி கும்பல் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதில், முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்