உலக புகழ்பெற்ற மைசூர் தசரா 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் யானை

x

உலக புகழ்பெற்ற மைசூர் தசரா750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் யானை


உலக புகழ்பெற்ற மைசூர் தசராவின் முக்கிய அம்சமான யானை அம்பாரி சுமக்கும் நிகழ்வை கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை இன்று பிற்பகல் தொடங்கி வைக்கிறார்.

10 நாள்களாக நடைபெற்று வந்த தசரா விழாவின் முக்கிய அம்சமான யானைகள் ஊர் வலத்தை மைசூர் அரண்மனை வளாகத்தில் கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி இன்று பிற்பகல் வைக்கிறாா். யானைகள் ஊா்வலத்தில் அபிமன்யு, லட்சுமி, சைத்ரா உள்ளிட்ட 14 யானைகள் கலந்துகொள்கின்றன. இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமக்கிறது. 5 கி.மீ. தூரம் செல்லும் யானைகள் ஊா்வலம் மைசூரின் புறநகரில் உள்ள பண்ணிமண்டபத்தில் நிறைவடையும். யானைகள் ஊா்வலம் பண்ணிமண்டபத்தை அடைந்ததும், தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் தீப்பந்த ஊா்வலம் நடத்தப்படும். இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கர்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தொடங்கி வைக்கிறாா். மைசூர் தசராவை காண லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்