வெள்ளி பல்லக்கில் எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் | Dharmapuram Adheenam

x

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேச விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன மடாதிபதி குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரம் ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நாளை பட்டடணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் குரு மூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் குருமூர்த்தங்களுக்கு எழுந்தருளினார். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்