"டேஞ்சர்".. கோரத்தாண்டவம் ஆடும் மழை ! மீண்டும் 2018..?- அலறும் கேரள மக்கள்

x

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில், 2018ம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை போல தற்போதும் நேரிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேரள மக்களின் அச்சத்திற்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவின் சோகமான காலம் என்றே சொல்லவேண்டும். 373 பேரை காவு வாங்கும் அளவிற்கு அப்போது பேய் மழை பெய்து தீர்த்தது.

அதீத மழையால் 35 அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப் பட்டு சாலையெங்கும் வெள்ளக்காடாய் காட்சியளித்தன, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதந்தன.

அந்த பெருவெள்ளத்தில் ஏராளாமானோர் உயிரிழந்தனர் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை பறிகொடுத்தனர். 2018 பெருமழையை அத்தனை எளிதில் மறந்துவிட மாட்டார்கள் கேரள மக்கள்.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக ஜூலையில் தொடங்கியுள்ளது. இதனால்1962ம் ஆண்டிற்கு பிறகு இந்தாண்டுதான் ஜூன் மாதத்தில் குறைந்தபட்ச மழை பதிவாகியிருந்தது.

லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக தொடங்கி, ரெட் அலர்ட்டுடன் மிரட்டி வருகிறது. குறிப்பாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட கண்ணூர், இடுக்கி, காசர்கோடு மாவட்டங் களில் பேய்மழை பெய்து வருகிறது.

அத்தோடு பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட இடங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதி கனமழையால் அணைகளும் வேகவேகமாக நிரம்பி வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மழை குறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் ஒருவர், தற்போது பெய்து வரும் மழை ஜூலை 7ம் தேதிக்குள் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் மழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கும் எனவும் கணித்துள்ளார்.

ஆக்ஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எல் நினோ தாக்கம் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளமும் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டது என்றே கூறப்படுகிறது.

தற்போது கேரளாவிலும் எல் நினோ தாக்கம் இருக்கக்கூடும் என்பதால், பெருமழை பெய்து 2018 நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர் கேரள மக்கள்.

இது ஒருபுறமிருக்க, நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்பு படையினர் என நிலைமைய சமாளிக்க முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது கேரள அரசு.


Next Story

மேலும் செய்திகள்