"லாரன்ஸ் படத்தில் டான்சர்களுக்கு சம்பளம் தரவில்லை" - காவல் நிலையத்தில் சினிமா ஏஜெண்ட் புகார்

ருத்ரன் திரைப்படத்தில் நடித்த நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸில், பகை முடி என்ற பாடல், அதிகளவு டான்ஸ் கலைஞர்களுடன் படமாக்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் அந்தப் பாடல் காட்சியில் நடித்த பின்னணி நடிகர்கள் மற்றும் டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை ஏற்பாடு செய்து கொடுத்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சினிமா ஏஜெண்ட் தன்ராஜ் என்பவர், அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மெயின் ஏஜெண்டாக செயல்பட்ட ஸ்ரீதர் சம்பள பாக்கியைத் தராததால், தான் அழைத்து வந்த கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகார் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com