"பால் பண்ணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும்" - அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு | chennai

x

மழை நாட்களில் தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைப்பெற்றது.

மழை நாட்களில் தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், பால் பண்ணைகளை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில் கால்நடைகளை பாதிக்கும் நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்