தினத்தந்தி கல்வி கண்காட்சி 2022, +2-க்கு பிறகு என்ன படிக்கலாம்...?

சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
x

தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம்(SRM) கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில், 12ஆம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம்? என்பது குறித்து கல்வித்துறை வல்லுநர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்த கண்காட்சியில், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கல்வி ஆலோசகர்கள் ரமேஷ் பிரபா, ராஜா, சுமலதா, மெர்செலின் உள்ளிட்டோர் பங்கேற்று, பொறியியல், விவசாயம், கலை-அறிவியல், நீட் தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்