'வெற்றி நிச்சயம்' தினத்தந்தியின் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு

'வெற்றி நிச்சயம்' தினத்தந்தியின் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தினத்தந்தி மற்றும் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய, மாணவர்களுக்கான 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மூலம் கல்வித்துறையில் பல பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும், மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com