கோவையில் வெடித்து சிதறிய கார்.. வழிபாட்டு தலங்களில் குவிக்கப்படும் போலீசார் - கோவையில் பரபரப்பு

x

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக, வழிபாட்டு தலங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். கோவையில் குனியமுத்தூர், உக்கடம், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை உக்கடத்தில் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தை அடுத்து வழிபாட்டுத் தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்